கனடாவில் நகைக் கடையில் கொள்ளையிட்ட 4 பேர் கைது
கனடாவின் அன்காஸ்டர் பகுதியில் உள்ள வில்சன் வீதியில் ஒரு நகை கடையில் நான்கு பேர் இரவு நேரத்தில் பலவந்தமாக நுழைந்து, கண்ணாடி அலமாரிகளை உடைத்து பல பொருட்களை திருடிச் சென்றுளள்னர்.
ஹமில்டன் பொலிஸார் இந்த சம்பவம் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
திங்கள்கிழமை அதிகாலை சுமார் 3.40 மணியளவில் இந்தச் சம்பவம் நடைபெற்றதாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் முதலில் கடையின் வெளியே உள்ள கதவை உடைத்து, அதன் பின்னர் உள்ளே இருந்த உலோகக் கதவைப் பிரித்து கடைக்குள் நுழைந்துள்ளனர்.
உள்ளே சென்ற அவர்கள் பல காட்சிப் பெட்டிகளை உடைத்து, உள்ளிருந்த நகைகளை எடுத்து கொண்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருடப்பட்ட பொருட்களின் முழுப் பட்டியல் இன்னும் மதிப்பீடு செய்யப்படுவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.