புடினுக்கு ஷாக் கொடுத்த மெக்ரான் ; ரஷ்யாவின் எண்ணெய் கப்பலை கைப்பற்றியது பிரான்ஸ்
ரஷ்யாவின் எண்ணெய் கப்பலை கைப்பற்றியதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரான் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா மற்றும் ஈரானின் மசகு எண்ணெயை சர்வதேசத் தடைகளை மீறி ஏற்றிச் சென்றதாக சந்தேகிக்கப்படும் ‘டாகோர்’ என்ற எண்ணெய்க் கப்பலை அட்லாண்டிக் பெருங்கடலில் பிரான்ஸ் கடற்படை கைப்பற்றியுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் உள்ளிட்ட நட்பு நாடுகளின் ஆதரவுடன், சர்வதேச கடல் எல்லையில் சட்டபூர்வமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேசத் தடைகளை மீறி மேற்கொள்ளப்படும் எண்ணெய் போக்குவரத்து, 4 ஆண்டுகளுக்கும் மேலாக உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா நடத்தி வரும் போருக்கு நிதியளிப்பதுடன், கடல் பாதுகாப்புக்கும் சுற்றுச்சூழலுக்கும் அச்சுறுத்தலாக இருப்பதாக மேக்ரான் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நடவடிக்கை ரஷ்யாவுக்கு முக்கிய அழுத்தமாக அமையக்கூடும் என சர்வதேச அரசியல் வட்டாரங்கள் மதிப்பிட்டுள்ளன.