பிரான்ஸ் பயணிகளுக்கு எச்சரிக்கை ; தொடருந்து சேவைகளில் பல இடையூறுகள்

France Railways World
By Sahana Aug 02, 2026 09:46 AM GMT
Report

பிரான்ஸின் தலைநகர் பரிஸ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள Île-de-France பிராந்தியங்களில் கோடை கால பராமரிப்பு பணிகள் காரணமாக பொதுப் போக்குவரத்து சேவைகளில் பல்வேறு இடையூறுகள் ஏற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

RATP மற்றும் SNCF நிர்வாகங்கள் தங்களது தொடருந்து மற்றும் நகரப் போக்குவரத்து வலையமைப்புகளில் புதுப்பிப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை முன்னெடுத்து வருவதால், எதிர்வரும் ஆகஸ்ட் 9 ஆம் திகதி வரை பல வழித்தடங்களில் சேவைகள் தடைப்படும் அல்லது மட்டுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RER A சேவையில், ஆகஸ்ட் 30 வரை Nation நிலையத்தில் தொடருந்துகள் நிற்காது. மேலும், ஆகஸ்ட் 8 முதல் 23 வரை Vincennes மற்றும் Noisy-le-Grand – Mont d'Est இடையிலான சேவைகள் முற்றாக நிறுத்தப்படும்.

பிரான்ஸ் பயணிகளுக்கு எச்சரிக்கை ; தொடருந்து சேவைகளில் பல இடையூறுகள் | France Travelers Many Disruptions Train Services

RER B சேவையில், ஆகஸ்ட் 16 வரை இரவு 10.45 மணிக்குப் பின்னர் Gare du Nord மற்றும் Aéroport Charles de Gaulle 2 – TGV / Mitry – Claye இடையிலான போக்குவரத்து இடம்பெறாது.

அதேவேளை, Bourg-la-Reine மற்றும் Gare du Nord இடையிலான சேவைகளும் குறிப்பிட்ட நாட்களில் பாதிக்கப்படும். RER C வழித்தடத்தில், ஆகஸ்ட் 22 வரை Gare d’Austerlitz மற்றும் Pontoise, Versailles Château Rive Gauche, Saint-Quentin en Yvelines – Montigny-le-Bretonneux ஆகிய பகுதிகளுக்கிடையிலான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

RER D சேவையில், Gare du Nord மற்றும் Gare de Lyon இடையிலான போக்குவரத்து ஆகஸ்ட் 16 வரை நிறுத்தப்படும். மேலும், Stade de France Saint-Denis நிலையத்தில் தொடருந்துகள் நிற்காது. RER E வழித்தடத்திலும் பல வார இறுதி மற்றும் இரவு நேர சேவைகள் நிறுத்தப்பட்டு, பயணிகளுக்காக மாற்றுப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Transilien தொடருந்து சேவைகளில் மாற்றங்கள்

Ligne H, Ligne J, Ligne K, Ligne L உள்ளிட்ட Transilien சேவைகளிலும் பராமரிப்பு பணிகள் காரணமாக பல்வேறு இடையூறுகள் ஏற்படும். Ligne K சேவையில், ஆகஸ்ட் 16 வரை Gare du Nord மற்றும் Mitry – Claye இடையிலான தொடருந்து சேவைகள் இயங்காது.

Ligne L சேவையில், ஆகஸ்ட் 7 வரை வார நாட்களில் இரவு 10.10 மணிக்குப் பின்னர் Gare Saint-Lazare மற்றும் La Défense இடையிலான சேவை நிறுத்தப்படும். மேலும், Ligne N, P மற்றும் R வழித்தடங்களில் இரவு நேர மற்றும் வார இறுதி சேவைகள் பல்வேறு நாட்களில் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tramway மற்றும் Metro சேவைகளிலும் பாதிப்பு

Tramway T1 சேவையில், L'Île-Saint-Denis பகுதியில் ஏற்பட்ட சேதம் காரணமாக Asnières – Quatre Routes மற்றும் Gare de Saint-Denis இடையிலான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு 2026 கோடை காலம் நிறைவடையும் வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. T2 நகரத் தொடருந்து சேவையில், Charlebourg மற்றும் Puteaux இடையிலான போக்குவரத்து ஆகஸ்ட் 23 வரை நிறுத்தப்படும்.

பிரான்ஸ் பயணிகளுக்கு எச்சரிக்கை ; தொடருந்து சேவைகளில் பல இடையூறுகள் | France Travelers Many Disruptions Train Services

Metro Ligne 8 சேவையில், புதுப்பிப்பு பணிகள் காரணமாக République நிலையத்தில் தொடருந்துகள் நிற்காது. இந்த நிலை 2027 ஏப்ரல் 22 வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Metro Ligne 13 சேவையில், ஆகஸ்ட் 17 வரை Saint-Denis – Université மற்றும் La Fourche இடையிலான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஆகஸ்ட் 2 ஆம் திகதி நண்பகல் வரை முழு வழித்தடத்திலும் சேவை இயங்காது. போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ள பெரும்பாலான பகுதிகளில் பயணிகளின் வசதிக்காக மாற்றுப் பேருந்து சேவைகள் (Bus de remplacement) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பயணிகள் தங்களது பயணங்களைத் திட்டமிடுவதற்கு முன் சம்பந்தப்பட்ட போக்குவரத்து நிறுவனங்களின் புதுப்பிக்கப்பட்ட அறிவிப்புகளைப் பரிசோதிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US