பிரான்ஸ் அதிபர் சீனாவுக்கு திடீர் பயணம்!
சீனாவுக்கு, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இன்று திடீர் பயணம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீன அதிபர் ஜீ ஜின்பிங்கை அதிபர் இம்மானுவேல் மேக்ரான் நேரில் சந்தித்து பேசவுள்ளதாக கூறப்படுகின்றது. இதுபற்றி தனது ட்விட்டரில் அதிபர் மேக்ரான் கூறியுள்ளதாவது,
அமைதியை கட்டமைப்பதில் சீனா ஒரு பெரும் பங்கு வகிக்கிறது என்று நான் உறுதியாக நம்புகிறேன். அதனாலேயே, நான் ஆலோசனை நடத்துவதற்காக சீனாவுக்கு வருகை தந்து உள்ளேன்.
சீன அதிபருடனான சந்திப்பில் , எங்களுடைய வர்த்தகம், பருவநிலை மற்றும் உயிர்ச்சூழல் மற்றும் உணவு பாதுகாப்பு உள்ளிட்ட விசயங்கள் பற்றி ஆலோசிக்க இருக்கிறேன் என மேக்ரான் தெரிவித்து உள்ளார்.
அதேவேளை உக்ரை ரஷ்ய போர் காரணமாக அமெரிக்காவுடன் சேர்ந்து, ஐரோப்பிய நாடுகள் சீனாவுக்கு எதிராகவும், எச்சரிக்கை விடுவது போல தங்களை காட்டிம் கொண்டாலும், சீனாவுடனான உறவை தொடர்வதில் தயக்கமற்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது