இந்தியப் பெண்ணுக்கு கனடா கொடுத்த அனுபவம்
சுற்றுலா சென்றிருந்த ஒரு இந்தியப் பெண்ணிடம், அமெரிக்கர்களான அவரது நண்பர்கள் சிலர், நீங்கள் கனேடியரா என்று கேட்டார்களாம்.
தன்னால் அந்தக் கேள்விக்கு உடனடியாக பதிலளிக்க முடியவில்லை என்கிறார் அந்தப் பெண். காரணம், இதற்கு முன் அவர் சந்தித்த அனுபவங்கள்...
தற்போது கனடாவில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற்று, ரொரன்றோவில் வாழ்ந்துவரும் இந்தியப் பெண்ணான சிந்து மகாதேவன், இதற்கு முன் சுமார் 10 ஆண்டுகள் அமெரிக்காவில் வாழ்ந்துவந்துள்ளார்.
தான் அவ்வளவு காலம் அமெரிக்காவில் வாழ்ந்தும், பல அமெரிக்கர்கள் தனக்கு நண்பர்களாக இருந்தும், அமெரிக்க கலாச்சாரத்தையும், அரசியலையும், வரலாற்றையும் புரிந்துகொள்ள முயற்சி எடுத்தும், அமெரிக்க புலம்பெயர்தல் அமைப்பு தான் ஒரு அமெரிக்கப் பெண் அல்ல என்பதை தனக்கு நினைவுபடுத்தத் தவறவேயில்லை என்கிறார் சிந்து.
அமெரிக்காவில் வாழ்ந்தும், அங்கு தான் ஒரு ஏலியன் போலவே உணரச்செய்யப்பட்டதாக தெரிவிக்கும் சிந்து, அந்த மோசமான அனுபவங்கள் தன் மனதில் ஆழமாக பதிந்துவிட்டதாகத் தெரிவிக்கிறார்.
Submitted by Sindhu Mahadevan
2021இல் கனடாவுக்குக் குடிபெயர்ந்திருக்கிறார் சிந்து. அவரது குடும்பம் ரொரன்றோவில் வாழ்ந்துவருகிறது.
2022இல் வெளிநாடு ஒன்றிற்குச் சென்றுவிட்டு கனடா திரும்பியிருக்கிறார்கள் சிந்துவும் அவரது கணவரும். விமான நிலையத்தில் குடிவரவுச் சோதனைக்காக வரிசையில் நிற்கும்போது படபடப்புடனேயே நின்ற சிந்து, தன் கணவரிடம், நீங்கள் எங்கு வேலை பார்க்கிறீர்கள் என்றெல்லாம் என்னிடம் கேட்பார்களா என்று பதற்றத்துடன் கேட்டுள்ளார்.
சிந்துவின் முறை வந்தபோது, தனது நிரந்தரக் குடியிருப்பு அனுமதி அட்டையை குடிவரவு அலுவலரிடம் கொடுக்க, அதைப் பார்வையிட்ட அவர், நிமிர்ந்து சிந்துவைப் பார்த்து, தாய்நாட்டுக்கு உங்களை வரவேற்கிறோம் என்று கூற, கேட்டாயா? என்றாராம் சிந்துவின் கணவர் மனைவியிடம் மெல்ல.
கனடா தன்னை ஏற்றுக்கொண்டதை, கனடா தன் வீடு என்பதை கனடா ஏற்றுக்கொண்டதை மகிழ்ச்சியுடன் அறிக்கை செய்கிறார் சிந்து.
Submitted by Sindhu Mahadevan
கனடாவில் புதிதாக ஒரு வீட்டுக்கு வடகைக்குச் செல்லும்போது, இந்தியப் பாரம்பரியப்படி வீட்டில் பால் காய்ச்சினாராம் சிந்து. அவ்வளவு காலம் அமெரிக்காவில் வாழ்ந்தும் தான் அங்கு வாழ்ந்த வீட்டில் பால் காய்ச்சவில்லை என்கிறார் அவர்.
அமெரிக்கா தந்த கசப்பான அனுபவத்தால், தன் நண்பர்கள் தன்னிடம் நீங்கள் ஒரு கனேடியரா என்று கேட்டபோது, உடனடியாக அதற்கு பதிலளிக்கக்கூட தன்னால் இயலாத நிலை இருந்தது என்று கூறும் சிந்து, அடுத்தமுறை யாராவது நீங்கள் கனேடியரா என்று கேட்டால், உடனடியாக ஆம் என்று தன்னால் பதிலளிக்கமுடியும் என்கிறார்!