சிங்கப்பூரில் 10 பேர் சேர்ந்த கும்பல் கைது
சிங்கப்பூரில் சட்டவிரோதமான பணப்பரிவர்த்தனை செய்த 10 பேர் சேர்ந்த கும்பலை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு பொலிஸார் 736 மில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துகளைப் பறிமுதல் செய்துள்ளனர்.
அதிரடி சோதனை மூலமாக சீனாவைச் சேர்ந்த நபர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலர் உள்பட 10 வெளிநாட்டவரை கைது செய்த சிங்கப்பூர் காவல்துறையினர் ரொக்கப்பணம் , சொத்து ஆவணங்கள், சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
400க்கும் மேற்பட்ட காவலர்கள் திட்டமிட்டு இந்த சோதனையை மேற்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஊழல், ஆன்லைன் சூதாட்டம் போன்ற பல சட்டவிரோத காரியங்களுக்காக பெரும் அளவிலான பணப்பரிமாற்றம் நடத்தப்பட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.