ஜேர்மனியில் ஒமைக்ரான் பரவல் ; மீண்டும் ஊரடங்கா?
ஜேர்மனியில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் காரணமாக, ஊரடங்கு வருமா என்ற கேள்விக்கு சுகாதார அமைச்சர் விளக்கமளித்துள்ளார். ஜேர்மனி அரசு ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
அதன்படி நேற்று நள்ளிரவு முதல் ஜேர்மனிக்குள் நுழையும் பிரித்தானியார்கள் இரண்டு வாரங்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் எனஅறிவிக்கப்பட்டது.
இதனால், ஜேர்மனியில் மீண்டும் கிறிஸ்துமஸ்க்கு முன் ஊரடங்கு அமுலுக்கு வர வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதார அமைச்சர் Karl Lauterbach,கிறிஸ்துமஸ்க்கு முன் ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை என கூறினார்.
அதே சமயம் கொரோனாவின் ஐந்தாவது அலையை நிறுத்த முடியாது எனவும், இதை கட்டுப்படுத்துவதற்கு ஒரே வழி தடுப்பூசி தான் எனவும் அவர் தெரிவித்தார்.