ஒன்ராறியோவில் உறவினர்களுடன் சென்ற 7 வயது சிறுமி கடத்தல்: கதறும் தந்தை

Arbin
Report this article
கல்கரியில் 7 வயது சிறுமி அவரது தாத்தா பாட்டியால் கடத்தப்பட்டிருக்கலாம் என கூறி தந்தை பொலிசாரை நாடியுள்ளார்.
குறித்த சிறுமியுடன் அவர்கள் துருக்கி நாட்டுக்கு சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தையும் அவர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
கனடாவில் வசிக்கும் ஜஸ்டின் கவுட்ஸ் என்பவரே தமது 7 வயதேயான மகள் Teaghan தொடர்பில் கல்கரி பொலிசாரை நாடியவர்.
சிறுமியின் தாய்வழி தாத்தா, பாட்டியான Louanne Bass-Hassan மற்றும் Mostafa Hassan ஆகியோர் அவரை சட்டவிரோதமாக கனடாவை விட்டு வெளியே கொண்டு சென்றிருக்கலாம் என்றே புகாரில் ஜஸ்டின் கவுட்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கல்கரி பொலிசார் துருக்கி பொலிசாருடன் இந்த விவகாரம் தொடர்பில் விவாதித்து வருவதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
ஜூலை 2ம் திகதி முதல் கோடை விடுமுறையை தாத்தா, பாட்டியுடன் கழிக்க சிறுமி Teaghan சென்ற நிலையில், 8 நாட்களுக்கு பின்னர் விடுமுறையை மேலும் நீட்டிப்பதாக Louanne Bass-Hassan மற்றும் Mostafa Hassan தம்பதி ஜஸ்டின் கவுட்ஸ் இடம் தெரிவித்துள்ளது.
இதில் சந்தேகம் எழுந்ததாலையே தாம் கல்கரி பொலிசாரிடம் புகார் அளித்ததாக ஜஸ்டின் கவுட்ஸ் தெரிவித்துள்ளார்.
தமது மகள் பிறந்து 7 மாதங்களில் அவரது தாயார் மரணமடைந்ததகாவும், அதன் பின்னர் தனியொருவராக தாம் மகளை வளர்த்து வருவதாக ஜஸ்டின் கவுட்ஸ் தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி மரணமடைந்த தமது மனைவியின் பெற்றோருடன் இணைந்தே தமது மகளை வளர்க்க முடிவு செய்ததாகவும், ஆனால் சில காரணங்களால் தாம் அவர்களிடம் இருந்து மகளுடன் பிரிந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது என்றும் ஜஸ்டின் கவுட்ஸ் தெரிவித்துள்ளார்.
தற்போது இந்த விவகாரம் தொடர்பில் கல்கரி பொலிசார் துருக்கி பொலிசாரை தொடர்பு கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
மேலும் கனடா முழுவதும் தேடுதல் எச்சரிக்கையும் பொலிஸ் சார்பில் விடுக்கப்பட்டுள்ளது.