ஜெர்மனியில் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறுமி; விடைதெரியாத பொலிஸார்!
ஜெர்மனியில் 13 வயது சிறுமி மயக்கமடைந்து, கைக்கால்கள் கட்டப்பட்ட நிலையில் மரங்கள் நிறைந்த பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
நார்த் ரைன் - வெஸ்ட்பாலியாவில் Ostbevern என்ற இடத்தில், செவ்வாய்க் கிழமை காலை 8 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீதியில் சென்ற நபர் ஒருவர் முதலில் ஒரு சைக்கிள் மற்றும் பை ஒன்றை கவனித்துள்ளார். அந்த வழியே சிறிது தூரம் நடந்து செல்லும் போது கேபிள் இணைப்புகளால் கை, கால்கள் கட்டப்பட்ட சிலையில் சிறுமி ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உடனடியாக இதனை அவதானித்த நபர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். அத்துடன் சம்பவ இடத்திற்கு அருகில் உள்ள கட்டுமான தளத்தில் இருந்த தொழிலாளர்கள் சம்பவ இடத்தை வந்தடைந்துள்ளனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் அங்கிருந்தவர்களை வெளியேறுமாறு கூறியுள்ளனர். தற்போது வரையில் சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று பொலிஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
விசாரணைக் காரணங்களுக்காக, செய்தித் தொடர்பாளர் சம்பவத்தின் நிலைமை குறித்து மேலும் எந்த தகவலையும் வழங்க விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.
இதுவரையில் சிறுமி காணாமல் போனமை தொடர்பில் எவ்வித முறைப்பாடுகளும் கிடைக்கவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சிறுமி உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் இன்னமும் மர்மமாகவே உள்ளதென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.