தங்கம் விலை அதிரடி சரிவு!
ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.32 குறைந்து ரூ. 4497 -க்கும், ஒரு சவரனுக்கு ரூ.256 குறைந்து ரூ.35,976 -க்கு விற்பனையாகிறது. தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர்.
நாடு முழுவதும் பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என பலரும் முதலீடு செய்த நிலை மாறி பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்தனர். இதனால், தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலையும் தாறுமாறாக உயர்ந்தது.இந்நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது.
அதன்படி ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.32 குறைந்து ரூ. 4497 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு சவரனுக்கு ரூ.256 குறைந்து ரூ.35,976 -க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை ஒரு ரூபாய் குறைந்து 72.20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.