பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி இளைஞர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்!
பிரான்ஸ் - ஜெர்மனி நாடுகளுக்கிடையே பயணிக்க இளைஞர்கள் பலருக்கு இலவச பயணிச்சீட்டுகள் வழங்கப்பட உள்ளன.
உறவினை வலுப்படுத்தும் நோக்கியில் இரு நாடுகளைச் சேர்ந்த இளைஞர்களுக்கு இந்த பயணிச்சீட்டுகள் வழங்கப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது.
60,000 பயணச்சிட்டைகள் இரு நாட்டு இளைஞர்களுக்கும் பிரித்து வழங்கப்பட உள்ளது. இந்த பயணச்சிட்டையை பயன்படுத்தி இரு நாடுகளுக்கிடையே பயணம் செய்ய முடியும்.
இளைஞர்கள் இரு நாடுகள் குறித்து அறிந்து கொள்ளவும், நல்லுறவை ஏற்படுத்தவும் இந்த பயணம் பயன்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன்(Emmanuel Macron) ஜெர்மனியின் தலைவர் Olaf Scholz ஆகிய இருவரும் சந்திப்பை மேற்கொண்டனர். ‘எலிசே ஒப்பந்தத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் முகமாக இந்த சந்திப்பு இடம்பெற்றது.
அதன் போதே மேற்படி அறிவித்தலை இரு நாட்டுத் தலைவர்களும் வெளியிட்டனர். இந்த பயணமானது இவ்வருட இறுதியில் இருந்து 2024 ஆம் ஆண்டின் நடுப்பகுதிவரை ஏற்பாடு செய்து தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
27 வயதிற்குட்பட்டவராக இருந்தால், இந்த கோடையில் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி இடையே பயணம் செய்ய விரும்பினால், இலவசமாக பயணிக்கலாம்.
இந்நிலையில் எலிஸி ஒப்பந்தத்தின் 60வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், விரைவில் குறிப்பிடப்படும் விதிமுறைகளின்படி, 60,000 டிக்கெட்டுகள் இலவசமாகக் கிடைக்கும் என்று ஒரு கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முயற்சியானது அதிகமான இளைஞர்களை ரயிலில் செல்வதை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டது என்றும் பிரான்சின் காலநிலை அபிலாஷைகளுக்கு ஏற்ப உள்ளது என்றும் குறிப்பிடப்படுகின்றது.