இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய கோட்டாபயவின் அறிவிப்பு!
முன்னதாக அறிவித்தபடி தனது பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் சற்று முன்னர் அறிவித்தார்.
கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட மக்கள் புரட்சியால் ஜனாதிபதி செயலகம் மற்றும் மாளிகை என்பன மக்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்நிலையில் அங்கிருந்து வெளியேறி தலைமறைவாக உள்ள ஜனாதிபதி, தனது பதவி விலகலை இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.
எதிர்வரும் 13ஆம் திகதி பதவ விலகவுள்ளதாக ஏற்கனவே சபாநாயகருக்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிந்திய தகவல்
அதேவேளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் செய்திகளை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மட்டுமே வெளியிடுவார் என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.