றொரன்டோ ரயில் நிலையங்களில் பயணிகளை தாக்கிய சிறுமிகள்
குறித்து விசாரணை றொரன்டோ ரயில் நிலையங்கள் சிலவற்றின் பயணிகள் மீது சிறுமிகள் சராமரி தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சுமார் பத்து சிறுமிகள் கடந்த மாதம் சில பயணிகள் மீது தாக்குதல் நடத்தியிருந்தனர் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.
குறித்த தினத்தில் தாக்குதலுக்கு இலக்கானவர்கள் 416-808-5200 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அது பற்றி அறிவிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
றொரன்டோவில் சிறுமிகளினால் அண்மையில் இழைக்கப்பட்ட இரண்டாவது வன்முறைச் சம்பவம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் 59 வயது நபர் ஒருவரை தாக்கி கொன்றதாக எட்டு சிறுமிகள் மீது குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இவ்வாறான பின்னணியில் ரயில் பயணிகள் மீது சிறுமிகள் இவ்வாறு தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பிலும் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.