ரொறன்ரோவில் எரிபொருட்களின் விலைகளில் பாரிய மாற்றம்!
ரொறன்ரோவில் பெரும்பாக பகுதியில் எரிபொருட்களின் விலைகள் உயர்வடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரொறன்ரோவில் பெற்றோலின் விலை லீற்றருக்கு ஐந்து சதம் என்ற அடிப்படையில் அதிகரிக்கப்பட உள்ளது.
நாளைய தினம் இந்த விலை அதிகரிப்பு பதிவாகும் எனவும் இந்த விலை உயர்வு மேலும் அதிகரிக்கும் போக்கினை பதிவு செய்யும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இன்று நள்ளிரவு முதல் ஒரு லீற்றர் பெற்றோல் விலை 153.9 சதங்களாக உயர்வடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒக்ரோபர் மாதத்தில் குறைந்த வேகத்தில் விலை உயர்வடையும் எனவும் நவம்பர் மாதத்தில் வேகமாக விலை உயர்வடையும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, இயன் புயல் காற்று தாக்கம் ஏற்பட்டால் எரிபொருட்களின் விலைகள் மேலும் உயர்வடையும் சாத்தியங்கள் காணப்படுவதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது.
அண்மைய வாரங்களாக றொரன்டோ பெரும்பாக பகுதியில் எரிபொருளின் விலையில் வீழ்ச்சி பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.