ஹோர்முஸ் நீரிணையால் நாளாந்தம் 700 மில்லியன் டொலர் இழப்பு!
ஹோர்முஸ் நீரிணையில் நீடிக்கும் இடையூறு காரணமாக வளைகுடா ஒத்துழைப்பு அமைப்பு (GCC) நாடுகள் நாளாந்தம் சுமார் 700 மில்லியன் டொலர் வரை எண்ணெய் வருமானத்தை இழந்து வருவதாக கோல்ட்மேன் சாக்ஸ் (Goldman Sachs) நிறுவனம் எச்சரித்துள்ளது.
சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தார் போன்ற நாடுகள் பெருமளவு நிதி மற்றும் எண்ணெய் கையிருப்புக்களைக் கொண்டிருந்தாலும், ஏற்றுமதி முடக்கத்தால் ஏற்படும் தாக்கம் பொருளாதாரத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

உலகளாவிய எண்ணெய் தேவையில் ஐந்தில் ஒரு பகுதியை ஏற்றிச் செல்லும் இந்த முக்கிய வழிப்பாதை மூடப்பட்டிருப்பதால், வளைகுடா நாடுகள் நாளொன்றுக்கு சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பைச் சந்தித்து வருகின்றன.
உலகச் சந்தையில் பிரெண்ட் (Brent) மசகு எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 126 டொலர்களைத் தாண்டிச் சென்றுள்ளது. இந்தப் பிரச்சனை வளைகுடாப் பிராந்தியத்தின் பொருளாதார நம்பகத்தன்மைக்கும், எரிசக்தி பாதுகாப்புக்கும் பெரும் சவாலாக மாறியுள்ளது.