இனி இளநரையால் கவலை வேண்டாம்; விஞ்ஞானிகள் வெளியிட்ட தகவல்!
நியூயார்க் பல்கலைக்கழகம் எலிகளை வைத்து ஆய்வினை மேற்கொண்டு, நரைமுடி ஏற்படுவதற்கான காரணம் குறித்த புதிய தகவல்களை வெளியிட்டுள்ளது.
ஸ்டெம் செல்கள்
அதில், நம் உடம்பில் உள்ள ஸ்டெம் செல்கள் தன்னைத் தானே புதுப்பித்துக்கொண்டு உருமாற்றம் அடையும் திறன் கொண்டவை.
இவை நுண்ணறைகளுக்கு நடுவே அடிக்கடி நகர்ந்து ஊடுருவும் காரணத்தினால் தான் முடிக்கு கருப்பு நிறத்தினை கொடுத்து அவற்றை வளமாக வைத்து கொள்ள உதவுகின்றன.
நகரும் திறனை இழக்கலாம்
இந்நிலையில் நமக்கு வயதாக ஆக இவை நகரும் திறனை இழக்கிறது. அதனால் தான் நமக்கு நரை முடி ஏற்படுகிறது.
இளவயதில் மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் இந்த ஸ்டெம் செல்கள் நகரும் திறனை இழக்கலாம் அதனால் இளநரை ஏற்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. காரணம் இதை பயன்படுத்தி நரைத்த முடியை மீண்டும் கருமையாக்கவும், முடி நரைக்காமல் தடுக்கவும் வழிகளை கண்டுபிடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.