ஏர் கனடா வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு!
ஏர் கனடா நிறுவனம் இந்த கோடையில் 79% விமானங்களை இயக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று காலத்திற்கு முந்தைய காலங்களில் இருந்தது போன்ற விமான சேவையை கொடுக்கவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏனெனில் தொழில்துறை பணியாளர்கள் பற்றாக்குறைக்கு மத்தியில் பயணத்திற்கான வலுவான தேவையை பூர்த்தி செய்ய வட அமெரிக்க விமானங்கள் தொடர்ந்து கடினமாக முயன்று வரும் நிலையில் இந்த திட்டத்தை ஏர் கனடா செயல்படுத்தவுள்ளது.
அதேவேளை கனடாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான ஏர் கனடாவின் விமானங்கள் ரத்தாவது, தாமதம் ஆவது போன்ற புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தது.
எனினும் ஜூன் இறுதி வாரத்தில் இருந்த செயல்பாட்டை விட ஆகஸ்ட் 8ஆம் திகதி வாரத்தின் அதன் செயல்திறனில் முன்னேற்றம் கண்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.