ஸ்காப்ரோ பள்ளிவாசலில் வெறுப்புணர்வு சம்பவம்
ஸ்காப்ரோ பகுதியில் பள்ளிவாசல் ஒன்றில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் செய்யப்பட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பள்ளிவாசலுக்குள் பிரவேசித்த நபர்களை அச்சுறுத்தும் வகையில் குரோத உணர்வின் அடிப்படையில் செயற்பட்டதாக குறித்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
டோரெஸ்ட் பகுதிக்கு அருகாமையில் அமைந்துள்ள பள்ளிவாசலில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பள்ளிவாசலுடன் தொடர்புபடாத நபர் இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்ததாகவும் அவரை அந்த இடத்தை விட்டு மக்கள் வெளியேற்றியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
41 வயதான ராபின் லாகார்ட்ஸ் என்ற ரொறன்ரோவை சேர்ந்த நபரே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் டொரன்டோவின் முதல்வர் ஒலிவியா சொள, கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
இஸ்லாமிய வெறுப்புணர்வு சம்பவங்கள் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் தெரிவித்துள்ளார்.