பிரான்ஸ் தேர்தலில் வெல்லப்போவது இவரா? வெளியான கருத்துக்கணிப்பு
பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலின் இரண்டாம் கட்ட கருத்துக்கணிப்பு வாக்கு சேகரிப்பில் மீண்டும் இமானுவேல் மக்ரோன் அதிக வாக்குகள் பெற்று மீண்டும் ஜனாதிபதியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
தற்போதைய அதிபராக இருக்கும் இம்மானுவேல் மக்ரோன் இன்னும் தன்னை அதிபர் வேட்பாளராக அறிவிக்கவில்லை. இருந்த போதிலும், அனைத்து கருத்துக் கணிப்புகளிலும் அதிக வாக்குகளைப் பெற்றவர் மக்ரோன். முதல் சுற்றில் அவர் 25% வாக்குகளைப் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இரண்டாவது சுற்றில் அவர் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டாவது சுற்று வாக்கெடுப்பில், ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் 55.5% வாக்குகளைப் பெறுவார், அதே சமயம் அவரை எதிர்த்துப் போட்டியிடும் Valérie Pécresse 44.5% வாக்குகளைப் பெறுவார்.
இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் இம்மானுவேல் மக்ரோன் அதிக வாக்குகளை பெற்றுள்ளதால் மீண்டும் அதிபராகும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது.
எவ்வாறாயினும், ஜனாதிபதி பதவிக்கான தனது பெயரை மக்ரோன் இன்னும் அறிவிக்காததாலும், தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ளதாலும், தற்போது எந்த முடிவையும் எடுக்க முடியாது என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.