ஒன்றாரியோ வெப்பநிலை குறித்து புதிய அறிவிப்பு
ஒன்றாரியோ மாகாணத்தில் தற்பொழுது நிலவி வரும் வெப்பநிலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
தெற்கு ஒன்டாரியோவின் பெரும்பாலான பகுதிகளையும், டொரோன்டோ பெரும்பாக பகுதியையும் (GTA) உள்ளடக்கிய வெப்பநிலையுடன் கூடிய வானிலையில் மாற்றம் ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடிய சுற்றாடல் திணைக்ளம் இது தொடர்பிலான தகவல்களை வெளியிட்டுள்ளது.
கடந்த பல நாட்களாகவெ குறித்த பகுதிகளில் கூடுதல் வெப்பநிலை நீடித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
சில பிராந்தியங்களில் வெப்பநிலை அதிகரிப்பு தொடர்பில் எச்சரிக்கை அறிவிப்புக்களும் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மாகாணத்தின் பல பகுதிகளுக்கு வெப்ப எச்சரிக்கை ஏற்கனவே முடிவுக்குக் கொண்டு வரப்பட்டிருந்தது.
எனினும் வெப்ப எச்சரிக்கை டொரோன்டோவில் இன்னும் நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று, புதன்கிழமை, டொரோன்டோவில் பகல்நேர உயர் வெப்பநிலை 30 பாகை செல்சியஸாக இருக்கும், ஈரப்பதத்தை கணக்கில் கொள்ளும்போது 38 பாகை செல்சியஸ் போல் உணரப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
இன்றைய தினம் மாலை அல்லது நாளை காலை வெப்பநிலை குறைவடையும் சாத்தியங்கள் உள்ளதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது.