ஹோட்டல் மீது மோதிய ஹெலிகாப்டர்... உரிமையாளர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
ஆஸ்திரேலியாவில் கெய்ர்ன்ஸ் நகரத்தில் உள்ள ஹில்டன்ஸ் டபுள் ட்ரீ என்ற ஹோட்டல் மீது ஹெலிகாப்டர் மோதிய விபத்தில் விமானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இன்று அதிகாலை டபுள் ட்ரீ என்ற ஹோட்டல் மேற்கூரை மீது ஹெலிகாப்டர் ஒன்று மோதி விபத்தில் சிக்கியுள்ளது.
இரட்டை இயந்திரம் கொண்ட அந்த ஹெலிகாப்டர், மோதிய வேகத்தில் கட்டிடத்தின் மேல்பகுதியில் தீப்பிடித்து எரிந்துள்ளது, குறித்த விபத்தில் சம்பவ இடத்திலேயே விமானி உயிரிழந்துள்ளது.
இதனை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஓட்டலில் இருந்த நூற்றுக்கணக்கானோர் உடனடியாக பாதுகாப்பான பகுதிக்கு மாற்றப்பட்டதாக குயின்ஸ்லேண்ட் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில், மேலும் இருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#BREAKING: Helicopter crashes into roof of Hilton Double Tree Hotel in Cairns Australia at 2AM. 400 people evacuated.#Australia #HelicopterCrash #helicopter #crash #HiltonHotel pic.twitter.com/VL920szSF1
— upuknews (@upuknews1) August 12, 2024
இதனையடுத்து விபத்தில் உயிரிழந்த விமானியை அடையாளம் காண்பதற்காக தடய அறிவியல் விசாரணைகளும் நடந்து வருகின்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹெலிகாப்டரின் உரிமையாளர் கூறும்போது,
எங்களுடைய விமானி அதனை ஓட்டவில்லை என்றும் ஹெலிகாப்டரை திருடி கொண்டு சென்றுள்ளதாகவும் அதில் ஒரே ஒரு விமானி தவிர வேறு யாரும் பயணிக்கவில்லை என கூறியுள்ளார்.