வங்காளதேசத்தில் பாரிய போராட்டம் ; அரசியல்வாதியால் இந்துப் பெண் பாலியில் வன்புணர்வு
உள்ளூர் பங்களதேச அரசியல்வாதி ஒருவரால் இந்துப் பெண் ஒருவர் கொடூரமாக பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டமைக்கு டாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் பாரிய போராட்டங்களை நடத்தி தலைநகரின் தெருக்களில் திரண்டனர்.
போராட்டங்களில் ஒன்றின் காணொளியில், மாணவர்கள் குற்றவாளிகள் மீது “நேரடி நடவடிக்கை” கோரி கோஷங்களை எழுப்புவதைக் காட்டியது.
குமிலா நகரில் 21 வயது யுவதியை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில், முக்கிய குற்றவாளியான கலீதா ஜியா தலைமையிலான வங்காளதேச தேசியவாதக் கட்சியின் (பிஎன்பி) உறுப்பினரான ஃபசோர் அலி உட்பட ஐந்து பேரை இதுவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஐந்து பேரில், மூன்று பேர் பாதிக்கப்பட்ட யுவதியின் காணொளியை பதிவு செய்து சமூக ஊடகங்களில் பகிர்ந்ததற்காகக் காவலில் எடுக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவம் 2025 ஜூன் 26 நிகழ்ந்துள்ளது. ஜூன் 27 அன்று பாதிக்கப்பட்டவரின் எழுத்துப்பூர்வ முறைப்பாட்டின் அடிப்படையில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் அடக்குமுறை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் முராத்நகர் பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் அப்பகுதியில் போராட்டங்களைத் தூண்டியுள்ளது. முஸ்லிம் ஆண் ஒருவர் இந்துப் பெண் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து குடியிருப்பாளர்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
பிரதமர் ஷேக் ஹசீனா பதவி நீக்கம் செய்யப்பட்டதிலிருந்து, வங்கதேசத்தில் இந்து சமூகத்திற்கு எதிரான இலக்கு தாக்குதல்கள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.