கனடாவில் வரி விடுமுறையினால் பாதிக்கப்பட்ட சில்லறை வியாபாரிகள்
கனடாவில் மத்திய அரசாங்கம் வரி விடுமுறை நடைமுறையை அறிமுகம் செய்துள்ளது.
கடந்த சனிக்கிழமை முதல் இந்த வரி விடுமுறை சலுகை திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
எனினும் இந்த வரி விடுமுறை சலுகையினால் சிறிய வர்த்தக நிறுவனங்கள் அசௌகரியங்களை எதிர் நோக்க நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொருட்கள் மற்றும் சேவைகள் வரி மற்றும் மாகாண விற்பனை வரி என்பன எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு மக்களிடமிருந்து அறவீடு செய்யப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வரி விடுமுறை நடைமுறையினால் சில்லறை வர்த்தகர்கள் பாதிப்புகளை எதிர்நோக்கி உள்ளதாப தெரிவிக்கப்படுகிறது.
உணவுப் பொருட்கள், பியர், வைன், உணவக உணவுப் பொருட்கள், சிறுவர் ஆடைகள், விளையாட்டு பொருட்கள் மற்றும் புத்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு இவ்வாறு வரி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு கனடிய மத்திய அரசாங்கம் இவ்வாறு வரி விடுமுறையை அறிவித்துள்ளது.
எவ்வாறு எனினும் இந்த வரி விடுமுறை நடைமுறையினால் சில்லறை வர்த்தக நிறுவனங்கள் பெரும் அசௌகரியங்களை எதிர் நோக்க நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக விற்பனை தொடர்பான கணனி மென்பொருட்களில் மாற்றம் செய்ய நேரிடுவதாகவும், வரி விகிதங்களில் மாற்றம் செய்ய வேண்டி இருப்பதாகவும் இது ஓர் சிக்கல் மிகுந்த செயல்பாடு எனவும் சில்லறை வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
சுமார் 6000 பொருட்களுக்கு இவ்வாறு வரிச் சலுகை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.