63 வருடங்களுக்குப் பின் மிகப்பெரிய வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் ஹாலிவுட்!

United States of America
By Sulokshi Jul 14, 2023 12:48 PM GMT
Report

    63 வருடங்களுக்குப் பின், குறைந்து வரும் ஊதியம் மற்றும் செயற்கை நுண்ணறிவு தாக்கத்தினால் வரும் ஆபத்து ஆகிய காரணங்களுக்காக ஹாலிவுட் திரைப்பட எழுத்தாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.

இந்த வேலைநிறுத்தத்தில் சின்னத்திரை கலைஞர்களும் இணையப்போகின்றனர்.

63 வருடங்களுக்குப் பின் மிகப்பெரிய வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் ஹாலிவுட்! | Hollywood Prepares Biggest Strike After 63 Years

இந்த வேலை நிறுத்தத்தை டாம் க்ரூஸ், ஏஞ்சலினா ஜோலி மற்றும் ஜானி டெப் உள்ளிட்ட முன்னணி திரைப்பட நட்சத்திரங்கள் உட்பட 1,60,000 கலைஞர்களை கொண்ட ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்ட் மற்றும் அமெரிக்க தொலைக்காட்சி மற்றும் வானொலி கலைஞர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

தொழிலாளர் ஒப்பந்தத்தை எட்டும் முயற்சி தோல்வி

வால்ட் டிஸ்னி மற்றும் நெட்ஃப்ளிக்ஸ் போன்ற மிகப்பிரபலமான நிறுவனங்களை உள்ளடக்கிய அலையன்ஸ் ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் அமைப்புடன் ஒரு புதிய தொழிலாளர் ஒப்பந்தத்தை எட்டும் முயற்சி தோல்வியடைந்ததால் இந்த அழைப்பு விடப்பட்டிருக்கிறது.

வேலைநிறுத்தம் தொழிற்சங்கங்களுடனான தொழிலாளர் ஒப்பந்தங்களின் கீழ் வராத தனியார் திரைப்பட தயாரிப்புகளை தவிர, அமெரிக்காவில் எழுதி உருவாக்கப்படும் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் அனைத்து தயாரிப்புகளையும் கட்டுப்படுத்தும்.

63 வருடங்களுக்குப் பின் மிகப்பெரிய வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் ஹாலிவுட்! | Hollywood Prepares Biggest Strike After 63 Years

இதனால் "ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்" (Stranger Things) மற்றும் "தி ஹேண்ட்மெய்ட்ஸ் டேல்" (The Handmaid's Tale) போன்ற பிரபலமான தொடர்களின் தயாரிப்பு இப்போது நீண்ட தாமதத்தை எதிர்கொள்கிறது.

வேலைநிறுத்தம் தொடர்ந்தால், சில முக்கிய திரைப்படங்களின் படப்பிடிப்பு தள்ளிப்போகலாம். அமெரிக்காவில் திரைப்படங்கள் தயாரிப்பதற்கு 2 முதல் 3 ஆண்டுகள் வரை ஆகும் என்பதால் திரையரங்குகளில் தற்போது வெளியிடப்பட உள்ள திரைப்படங்கள் உடனடியாக பாதிக்கப்பட போவதில்லை.

ஆனால் மார்வெல் நிறுவன தயாரிப்பான பிளேட் (Blade) மற்றும் தண்டர்போல்ட்ஸ் (Thunderbolts) போன்ற எதிர்கால வெளியீடுகள் தாமதமாகும். தொழிலாளர் மோதல்கள் தீர்க்கப்படும் வரை அவை நிறுத்தி வைக்கப்படலாம்.

63 வருடங்களுக்குப் பின் மிகப்பெரிய வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் ஹாலிவுட்! | Hollywood Prepares Biggest Strike After 63 Years

வெளிவரவிருக்கும் திரைப்படங்களின் விளம்பர நிகழ்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படும்.

எனினும் அமேசான் நிறுவனத்தின் பிரைம் வீடியோ மற்றும் நெட்ஃப்ளிக்ஸ் (Netflix) போன்ற ஸ்ட்ரீமிங் சேவைகள் எனப்படும் இணையவழி பொழுதுபோக்குகளில் கொரியாவிலும் இந்தியாவிலும் தயாரிக்கப்படும் உள்ளூர் மொழி நிகழ்ச்சிகளை தொடர்ந்து வழங்க முடியும்.

அதேசமயம் இது போன்றதொரு வேலைநிறுத்தம் கடைசியாக 1960-ல் ரொனால்டு ரீகன் தலைமையில் நடைபெற்றதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.     

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US