கனடாவில் பள்ளி வளாகத்தில் கொலை செய்யப்பட்ட இளைஞர் இவர்தான்: வெளியான புகைப்படம்
பிரிட்டிஷ் கொலம்பியாவில் கடந்த வார இறுதியில் பள்ளி வளாகம் ஒன்றில் கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட இளைஞர் தொடர்பில் பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர்.
செப்டம்பர் 5ம் திகதி Penticton பள்ளி வளாகத்திலேயே குறித்த இளைஞர் கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கபட்டார். அவர் பள்ளி மாணவர் அல்ல என உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது அவரது பெயர், புகைப்படம் உள்ளிட்ட தகவல்களை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
22 வயதான Taig Savage என்பவரே பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். பொலிசார் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்ததுடன், அவர் தொடர்பான தகவல்களையும் திரட்டி வந்துள்ளனர்.
தற்போது அந்த இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளதாக உறுதி செய்துள்ள பொலிசார், மேலதிக தகவல்களை வெளியிட மறுத்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் Penticton பொலிசார் வெளியிட்ட அறிக்கையில்,
குறித்த இளைஞர் தொடர்பில் இரண்டு புகைப்படங்கள் வெளியிட்டுள்ளதாகவும், இதனால் அவர் தொடர்பில் மேலதிக தகவல்கள் பொதுமக்கள் மத்தியில் இருந்து கிடைக்க வாய்ப்பிருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
கொல்லப்பட்ட இளைஞர் Eckhardt Avenue பகுதியை சேர்ந்தவர் என்பது தங்களுக்கு முன்னமே தெரியும் என சுட்டிக்காட்டியுள்ள பொலிசார், அவர் கொலை செய்யப்பட காரணமான பின்னணியை விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
செப்டம்பர் 5ம் திகதிக்கு முன்னர் அந்த இளைஞரை நேரில் பார்த்தவர்கள் அல்லது அவருடன் தொடர்பு கொள்ள முயன்றவர்கள், பொலிசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.