இந்தியாவில் திருமண பந்தத்தில் இணைந்த ஓரின சேர்க்கையாளர்கள்!
இந்தியா ஹைதராபாத்தில் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணம் செய்துகொண்ட சம்பவம் பெரும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது. ஆண்கள் ஒன்றாக வாழ்வது அதிர்ச்சியாக இருந்தாலும், ஓரளவு பரவலாகி வருகிறது.
இந்தியாவில் ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் திருமணம் (Same Sex Marriage) செய்துக் கொள்ள முடியாது என்பதால், இந்த இரு ஓரின சேர்க்கை ஆண்களும் தங்களின் எட்டு ஆண்டு கால உறவை அதிகாரப்பூர்வமாக்க வெளிப்படுத்தும் 'நம்பிக்கை தரும் விழாவாக' நடத்தினார்கள்.
34 வயது அபய் டாங்கே மற்றும் 31 வயது சுப்ரியோ சக்ரவர்த்தி என்ற இரு ஆண்களும் டிசம்பர் 18 அன்று ஹைதராபாத் புறநகரில் உள்ள ஒரு ரிசார்ட்டில் நடந்த ஒரு தனியார் விழாவில் மோதிரங்கள் மாற்றி ஒன்றாக வாழும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
இந்த திருமணம் எனப்படும் நம்பிக்கை தரும் விழாவில் (promising ceremony) குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தம்பதியினரின் நெருங்கிய நண்பர்கள் என மொத்தம் 60 பேர் கலந்து கொண்டனர்.
இதேவேளை இந்தியாவில் ஒரே பாலின திருமணங்கள் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படாததால், சுப்ரியோவும் அபயும் தங்களின் எட்டு ஆண்டு கால உறவை அதிகாரப்பூர்வமாக்க 'நம்பிக்கை தரும் விழாவை' நடத்தினர்.
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த அபய், ஒரு இ-காமர்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு தகவல் தொழில்நுட்ப வல்லுநராக உள்ள நிலையில் , பெங்காலியைச் சேர்ந்த சுப்ரியோ ஒரு விருந்தோம்பல் நிபுணராக உள்ளதாகவும் கூறப்படுகின்றது.