தூங்கி வழிந்த சாரதி... கோர விபத்தில் சிக்கி உடல் நசுங்கி பலியான பலர்
வடக்கு குரோஷியாவில் யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று சாலையில் கட்டுப்பாட்டை இழந்ததில் 12 பேர் உடல் நசுங்கி பலியாகியுள்ளனர்.
குறித்த கோர விபத்தானது சாரதி தூங்கியதால் ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. போலந்து நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள அந்த பேருந்தானது 43 பயணிகளுடன் புறப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் பலர் காயங்களுடன் தப்பியுள்ளனர். 30 பேர்கள் வரையில் காயமடைந்துள்ளதாகவும், பலர் படுகாயங்களுடன் சிகிச்சை பெறுவதாகவும் குரோஷியா அரசு செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.
பேருந்து பயணத்தினிடையே சாரதி தூங்கினாரா என்பது தொடர்பில் விசாரணை முன்னெடுத்து வருவதாகவும் குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
சம்பவத்தின் போது குறித்த பேருந்தானது குரோஷியா தலைநகர் Zagreb நோக்கி பயணப்பட்டுள்ளதாகவும், அங்கிருந்து கத்தோலிக்க மக்கள் வழிபடும் புனித தலமான Medjugorje நகருக்கு செல்ல இருந்ததாகவும் போலந்து பிரதமர் Mateusz Morawiecki தெரிவித்துள்ளார்.
உள்ளூர் நேரப்படி அதிகாலை 5.40 மணியளவில் ஜாக்ரெப்பில் இருந்து வடக்கே 30 மைல் தொலைவில், ஏ-4 நெடுஞ்சாலையில், பரபரப்பான பாதையில் குறித்த விபத்து நடந்தது என தெரியவந்துள்ளது.