காதலின் பெயரால் மோசடி: தென் கொரிய சிறையில் வாடும் கனடா பெண்

British Columbia Canada
By Kamal Apr 08, 2026 12:30 PM GMT
Report

 கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் சர்ரே (Surrey) பகுதியைச் சேர்ந்த 59 வயதான ஸ்பிரிங் பார்க்ஸ் (Spring Parks), கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக தென் கொரிய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இணையதளம் வழியாக அறிமுகமான நபர் ஒருவரை காதலித்த இவரை, அந்த நபர் போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

ஸ்பிரிங் பார்க்ஸ் காதுகேளாதவர் (Deaf) மற்றும் பேசும் திறன் அற்றவர். இணையதளம் மூலம் பழகிய நபர் ஒருவர் மீது கொண்ட காதலால், அவரைச் சந்திக்க வான்கூவரில் இருந்து தென் கொரியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

காதலின் பெயரால் மோசடி: தென் கொரிய சிறையில் வாடும் கனடா பெண் | How A Bc Romance Scam Victim Is Coping Behind Bars

பயணத்தின் இடையே, அந்த நபர் சொன்ன அறிவுறுத்தலின்படி தென் ஆப்பிரிக்காவில் ஒரு சூட்கேஸை வாங்கிக் கொண்டு கொரியா சென்றார்.

அங்கு விமான நிலையத்தில் சோதனையிட்ட அதிகாரிகள், அவரது சூட்கேஸில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 4 கிலோ மெத்தாம்பேட்டமைன் (Methamphetamine) போதைப்பொருளைக் கண்டெடுத்து அவரைக் கைது செய்தனர்.

அவர் அந்த சூட்கேஸில் போதைப்பொருள் இருப்பதை அறிந்திருக்கவில்லை. அவர் ஒரு பலிகடா மட்டுமே. காதல் என்ற பெயரில் அவர் மூளைச்சலவை செய்யப்பட்டு, மிகத் தந்திரமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளார்" என ஸ்பிரிங் பார்க்ஸின் வழக்கறிஞரான சீன் ஹேய்ஸ் (Sean Hayes) தெரிவித்துள்ளார்.

எனினும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் அளவு அதிகமாக இருப்பதால், இது ஒரு திட்டமிட்ட கடத்தல் என அரசு தரப்பு வழக்கறிஞர்கள் சந்தேகிக்கின்றனர்.

பார்க்ஸ் காதுகேளாதவர் என்பதால், சிறை அதிகாரிகளுடன் தொடர்புகொள்வதில் பெரும் சிரமம் நீடிக்கிறது. கொரிய சிறைகளில் நிலவும் கடும் குளிரும், அடிப்படை உணவுகளும் அவருக்குப் பெரும் சவாலாக உள்ளன.

தான் நேசித்த நபர் தன்னை ஏமாற்றி சிறைக்கு அனுப்பியதை உணர்ந்த அவர், மிகுந்த மனவேதனையில் இருப்பதாகத் தெரிகிறது. மெட்ரோ வான்கூவரில் வசிக்கும் பார்க்ஸின் மகள்கள் ஆண்ட்ரியா மற்றும் லோரீன், பிப்ரவரி மாதம் வந்த அந்த ஒரு அதிர்ச்சித் தகவலுக்குப் பிறகு இன்றுவரை தாயிடம் பேசக்கூட முடியவில்லை என்று கதறுகின்றனர்.

இந்த வழக்கை உற்றுநோக்கும் சட்ட வல்லுநர்கள், தற்போது 'ரொமான்ஸ் ஸ்கேம்' (Romance Scam) எனப்படும் காதல் மோசடிகள் அதிகரித்து வருவதாக எச்சரிக்கின்றனர்.

முதியவர்கள் மட்டுமின்றி, இளைஞர்களும் இதுபோன்ற தந்திரமான வலைகளில் சிக்கித் தங்கள் வாழ்வைத் தொலைப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ள நிலையில், பார்க்ஸின் வழக்கறிஞர்கள் அவர் அறியாமல் செய்த தவறுக்காகக் குறைந்தபட்சத் தண்டனையை பெற்றுத் தரப் போராடி வருகின்றனர். 

10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US