ஈரான் இராணுவத்திற்கு உச்ச தலைவர் பிறப்பித்த உத்தரவு ; போர் நிறுத்தத்திலும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை
ஒரு மாதமாக போர் தொடர்ந்து நடந்து வந்த சூழலில் ஈரானின் பதிலடிகளால் அதிருப்தியடைந்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், நேற்று இரவு ஈரானின் பொதுமக்கள் பயன்படுத்தும் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்த ஆயத்தமானார். இரவு ஒரு முழு நாகரிகமே அழியப் போகிறது என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.
ஆனால் அதிரடி திருப்பமாக பாகிஸ்தான் மத்யஸ்தத்தில் இரு நாடுகளும் 2 வார போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டு பேச்சுவார்த்தைக்கு முன் வந்துள்ளன.

தற்காலிக இடைநிறுத்தம் மட்டுமே
மேலும் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஏப்ரல் 10 பேச்சுவார்த்தை தொடங்க உள்ள நிலையில் இந்த காலகட்டதில் ஹார்முஸ் ஜலசந்தி வலியாக ஈரான் ராணுவ மேற்பார்வையுடன் கப்பல்கள் செல்ல அனுமதிப்பதாக ஈரான் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சூழலில் மறைந்த அயதுல்லா காமேனியின் மகனும் ஈரானின் புதிய உச்ச தலைவருமான மொஜ்தபா கமேனி, அனைத்து ராணுவப் பிரிவுகளும் துப்பாக்கிச் சூட்டை நிறுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும், இது போரின் முடிவைக் குறிக்கவில்லை என்றும், பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுக்கும் ஒரு தற்காலிக இடைநிறுத்தம் மட்டுமே என்றும் தெஹ்ரான் தெளிவுபடுத்தியுள்ளது.
போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட போதிலும், ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில், தங்கள் கைகள் இன்னும் துப்பாக்கியின் விசையின் மீதே இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
"எதிரி மிகச்சிறிய தவறைச் செய்தாலும், நாங்கள் முழு பலத்துடன் பதிலடி கொடுப்போம்," என்று கவுன்சில் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு கெஞ்சுவது ஈரானின் வெற்றி எனவும் தெரிவித்துள்ளது.
ஈரான் உச்சதலைவரின் அறிக்கைகள் ஊடகங்களில் வாசிக்கப்படுகிறவனே தவிர அவர் பொது வெளியில் தோன்றாதது அவரது நிலை குறித்த ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது.