தீவிரவாத சந்தேக நபர்களின் கனடிய பிரவேசம் குறித்து விசாரணை
தீவிரவாத சந்தேக நபர்கள் எவ்வாறு கனடாவிற்குள் பிரவேசித்தனர் என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ரொறன்ரோவில் பாரிய தாக்குல் ஒன்றை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர் என்ற குற்றச்சாட்டில் இரண்டு பேரை பொலிஸார் கைது செய்திருந்தனர்.
62 வயதான பவுட் முஸ்டபா அல்டிடி மற்றும் 26 வயதான முஸ்டபா அல்டிடி என்ற அவரது மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் எவ்வாறு கனடாவிற்குள் குடியேறினர் என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடிய பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டொமினிக் லிபெலான்க் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
பொதுப் பாதுகாப்பு மற்றும் குடிவரவு திணைக்களம் என்பன கூட்டாக இணைந்து சந்தேக நபர்கள் எவ்வாறு கனடாவிற்குள் குடியேறினர் என்பது குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
62 வயதான பவுட் ஓர் கனடிய பிரஜை என்பது குறிப்பிடத்தக்கது.