என் எதிரிக்கு கூட அந்த நிலை வரக்கூடாது... உயிர் போகும் வலியுடன் மருத்துவமனையின் தரையில் படுத்து கிடந்த கனேடிய பெண்மணி
கியூபெக் பெண் ஒருவர், உயிர் போகும் வலியுடன் மருத்துவமனைக்கு சென்ற நிலையில், தான் ஆறு மணி நேரம் தரையில் கவனிப்பாரின்றி படுத்துக் கிடக்க நேரிட்டதாக தெரிவித்துள்ளார்.
Hélène Barette-Mousseau (68) என்ற பெண், குடல்வால் பிரச்சினையுடன் கியூபெக்கிலுள்ள Hull Hospitalக்கு சென்றிருக்கிறார். நோய் முற்றி குடல்வால் அழுகி சிதைந்து உயிர் போகும் அளவுக்கு வலியால் துடித்த அவர் தன்னை ஒரு ஸ்ட்ரெச்சரில் கிடத்துமாறு கோரியும், யாரும் அவருக்கு ஸ்ட்ரெச்சர் தராததால் வெறும் தரையில் சுமார் ஆறு மணி நேரம் வலியால் துடித்தபடி படுத்துக் கிடந்தாக தெரிவித்துள்ளார்.
தான் அவமதிக்கப்பட்டதுபோல் உணர்ந்ததாக தெரிவிக்கும் Hélène, ஒரு போர்வை கூட இல்லாமல் இப்படி தரையில் காத்துக்கிடக்க யாரும் விரும்ப மாட்டார்கள் என்றே நான் நினைக்கிறேன், என் எதிரிக்குக் கூட இப்படி ஒரு நிலைமை வரக்கூடாது என்கிறார்.
மருத்துவமனை மீது புகார் ஒன்றை Hélène பதிவு செய்துள்ள நிலையில், கியூபெக்கின் சுகாதாரத்துறை அமைச்சரான Christian Dubé, தான் அந்த சம்பவம் குறித்துக் கேள்விப்பட்டபோது அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளார்.
என்னதான் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு பிஸியாக இருக்கும் என்றாலும், ஒரு நோயாளியை தரையில் தவிக்க விட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளார் அவர்.