கனடாவில் இந்த பகுதி மக்கள் தனிநாடு கோரி பேரணி
கனடாவின் கியுபெக் மாகாணத்தை தனி நாடாக பிரடகனம் செய்ய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மொன்ட்ரியால் நகரின் மையப்பகுதியில் சனிக்கிழமை நூற்றுக்கணக்கான மக்கள் தெருக்களில் பேரணியாக இறங்கி இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
இந்த பேரணி, 1995 ஆம் ஆண்டு அக்டோபர் 30 அன்று நடைபெற்ற சுயாட்சிக் கருத்துக்கணிப்பின் 30 ஆம் ஆண்டு நினைவாக முன்னெடுக்கப்பட்டது. இன்று இளைஞர்கள் பெருமளவில் இயக்கத்தில் இணைந்து வருகிறார்கள்.
Z தலைமுறை அமைப்புசார்ந்த மாற்றத்தைக் கேட்கிறது; அவர்களுக்கு சுதந்திரம் அதற்கான தீர்வாகத் தோன்றுகிறது என OUI Québec அமைப்பின் தலைவர் கமீல் கோயெட்-கிங்ராஸ் குறிப்பிட்டுள்ளார்.

1995 இல் நடைபெற்ற கருத்துக்கணிப்பில் தனிநாட்டு கோரிக்கைக்கு எதிரானவர்கள் 50.58% வாக்குகளால் மிகக் குறைந்த வித்தியாசத்தில் வென்றனர். இதற்கு முன்னர் 1980 இல் நடைபெற்ற முதல் கருத்துக்கணிப்பில் 40.44% பேர் மட்டுமே சுயாட்சிக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.
தற்போது பார்டி கெபெகொயிஸ் (PQ) கட்சி கருத்துக்கணிப்பில் முன்னிலையில் இருந்து, 2030 க்குள் மூன்றாவது கருத்துக்கணிப்பை நடத்தும் எதிர்பார்ப்புடன் செயற்பட்டு வருகின்றது.
இது ஒரு குடிமக்கள் வழிநடத்தப்படும், கட்சி சார்பற்ற இயக்கம். இன்னும் சில ஆண்டுகளில் புதிய கருத்துக்கணிப்பை நடத்தும் அளவுக்கு இது பெரிதாக வளரும் என்று நம்புகிறேன் என கோயெட்-கிங்ராஸ் குறிப்பிட்டுள்ளார்.
இளைஞர்கள் பலரும் காலநிலை மாற்றம் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வாக சுயாட்சியைக் காண்கிறார்கள் என தெரிவித்துள்ளார். கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள், 1980 மற்றும் 1995 இல் நடந்த கருத்துக்கணிப்புகளில் பங்கேற்ற மூத்த தலைமுறையினருடன் சேர்ந்து நடைபயணத்தில் இணைந்தனர்.
சுயாட்சியை ஆதரிக்கும் கேபெக் சோலிடெயர் கட்சியின் எம்.என்.ஏ.க்கள் மனோன் மாசே மற்றும் ரூபா கஜால் ஆகியோரும் பேரணியில் கலந்து கொண்டனர்.