அமெரிக்காவில் இந்திய வம்சாவளி ஆசிரியை கைது ; வீட்டு வேலை செய்யாத கணவனுக்கு கத்திக்குத்து
அமெரிக்காவில் வீட்டை சுத்தம் செய்யாததற்காக கணவரின் கழுத்தில் கத்தியால் குத்தியதாக இந்திய வம்சாவளி ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.
வட கரோலினாவின் பாக்ஸ்ஹேவன் டிரைவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தொடக்கப்பள்ளி ஆசிரியை ஒருவர் தனது கணவர் உடன் வசித்து வந்தார்.

சம்பவம் தொடர்பாக விசாரணை
இந்நிலையில் வீட்டை சுத்தம் செய்யாதது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் தனது கணவரை கத்தியால் கழுத்தில் குத்தியுள்ளார்.
இதனால் கழுத்தில் ஆழமான காயம் ஏற்பட்டு அரவிந்த் சிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்த பொலிஸார் சந்திரபிரபாவை கைது செய்தனர்.
பொலிஸாரிடம் சந்திரபிரபா கூறுகையில், "காலை உணவு தயாரிக்கும் போது என் கணவரிடம் எனக்கு உதவுமாறு கேட்டேன். அவர் வீட்டை சுத்தம் செய்யாததால் நான் மிகவும் வருத்தப்பட்டேன்.
நான் கையில் கத்தியுடன் திரும்பியபோது, தற்செயலாக என் கணவரின் கழுத்தில் காயம் ஏற்பட்டது" என்று கூறினார். இருப்பினும், அரவிந்த் சிங் தனது மனைவி வேண்டுமென்றே தன்னை குத்தியதாக குற்றம்சாட்டியுள்ளார்.
தற்போது சந்திரபிரபா ஜாமீனில் வெளிவந்துள்ளார். பள்ளியிலிருந்தும் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.