கனடாவை விட்டு வெளியேறும் குடியேறிகள்..... ஏன் தெரியுமா ?
பெரும் எண்ணிக்கையிலான குடியேறிகள் கனடாவை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கனடிய குடியுரிமை நிறுவகம் மற்றும் கனடிய பேரவை என்பன இது தொடர்பிலான ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளன.
கடந்த 2017 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் கனடாவை விட்டு வெளியேறிய குடியேறிகளின் எண்ணிக்கை 31 வீதம் எனவும் இது தேசிய சராசரி எண்ணிக்கையை விடவும் அதிகம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பொருளாதார காரணிகள், இனவாத பிரச்சனைகள், வீட்டு உரிமை வேறு நாடுகளில் கிடைக்கப்பெறும் பொருளாதார வாய்ப்புகள் போன்ற காரணிகளின் அடிப்படையில் கனடாவை விட்டு வெளிநாட்டவர்கள் வேறும் நாடுகளுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பெரும்பணிக்கையிலான வெளிநாட்டவர்கள் கனடாவில் வீடு ஒன்றை கொள்வனவு செய்வதில் சவால்களை எதிர்நோக்கி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணமாகவும் வெளிநாட்டவர்கள் வேறும் நாடுகளை நோக்கி குடிப்பெயரத் தொடங்கியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.