யாழ் நல்லூர் கந்தன் ஆலயம் செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழா நேற்றையதினம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
இந்நிலையில் ஆலய திருவிழாவில் பங்கேற்கும் அடியவர்கள் தங்க நகைகள் அணிவதையும் மற்றும் பணத்தை எடுத்துச் செல்வதையும் தவிர்க்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
அத்துடன், பொதுமக்கள் ஆலயம் வீட்டில் ஒருவராவது தங்கியிருப்பதுடன் அல்லது பாதுகாப்பாக வீட்டைப் பூட்டி ஆலயத்துக்குச் செல்லுமாறும் யாழ் தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ள நிலையில் பெருந்திரளான பக்கதர்கள் நல்லூர் கந்தன் ஆலயத்தை தரிசனம் செய்யவுள்ளனர். இந்நிலையில் ஆலய சூழலில் வழமைபோன்று சீருடை மற்றும் சிவில் உடையில் பொலிஸார் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
எனினும், திருடர்கள் மற்றும் கொள்ளையர்களின் நடவடிக்கைகள் தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே ஆலயத்துக்கு வருகை தரும் அடியவர்கள் தமது தங்க நகைகள் மற்றும் பணத்தை பாதுகாப்பாக வைத்திருக்குமாறு யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கேட்டுள்ளார்.
மேலும் பக்தர்கள் இயன்றளவு தங்க நகைகளை அணிவதைக் குறைப்பதுடன் பணத்தை எடுத்துவருவதைத் தவிர்க்குமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.