கனடாவில் அதிகரித்த வாழ்வாதார செலவுகள்...முக்கிய முடிவெடுத்த மக்கள்
கனடாவில், வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதால், மக்கள் தங்கள் செலவினங்களைக் குறைப்பதற்கான வழிகளைத் தேடுகிறார்கள் என்று லிஜே கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.
கணக்கெடுக்கப்பட்டவர்களில் கிட்டத்தட்ட 80 சதவிகிதத்தினர் தங்கள் வீடுகளுக்கு மலிவான மளிகைப் பொருட்களை வாங்கத் தொடங்கியதாகக் கூறினர். மூன்றில் ஒரு பகுதியினர் வீட்டுப் பொருட்கள் மற்றும் தளபாடங்கள் வாங்குவதற்கும் உணவகங்களுக்குச் செல்வதற்கும் ஆகும் செலவைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ளனர்.
அதிகரித்து வரும் எரிபொருள் விலையை சமாளிக்க, 50 சதவீத கனடியர்கள் ஏற்கனவே தங்கள் வாகனங்களை குறைவாகவே பயன்படுத்துகின்றனர், மேலும் மூன்றில் ஒரு பகுதியினர் மின்சார வாகனம் வாங்குவது குறித்து ஆலோசித்து வருகின்றனர்.
கனடாவில் உள்ள 80 சதவீத மக்கள் தங்கள் பணவீக்கம் தங்கள் குடும்பத்தை பாதித்துள்ளதாகவும், நிலைமை தொடர்ந்தால் நிதி நெருக்கடி ஏற்படக்கூடும் என்றும் கவலை தெரிவித்துள்ளனர்.