ரொறன்ரோவில் மத வழிபாட்டு தலங்களுக்கு தொடர்ந்தும் கூடுதல் பாதுகாப்பு!
கனடாவின் ரொறன்ரோவில் மத வழிபாட்டு தலங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக யூத மத சமூக வழிபாட்டுத் தலங்களுக்கும் ஏனையய மத வழிபாட்டு தலங்களுக்கும் இவ்வாறு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரொறன்ரோ போலீஸ் சேவையினர் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.
யூத மக்கள் வழிபாடுகளில் ஈடுபடும் இடங்களுக்கு அச்சுத்தல் காணப்படுவதாக எவ்வித நம்பகமான தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறு எனினும் மத வழிபாட்டுத் தலங்கள் அமைந்துள்ள பகுதிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
உலக அளவில் இணைய வழியில் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
உலகளாவிய ரீதியில் இடம் பெற்று வரும் நிலைமைகளை அவதானித்து அதன் அடிப்படையில் செயல்பட்டு வருவதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.