நேபாளத்திற்கு நிவாரண உதவியை வழங்கும் இந்தியா
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாள நாட்டிற்கு இந்தியா தொடர்ந்து நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது.
இந்திய விமானப் படையின் C-130 விமானம் இன்றைய தினம் (07.11.2023) ஒன்பது டன் அளவிலான நிவாரணப் பொருட்களுடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் பாதிப்படைந்த நேபாளத்திற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அவசர முதலுதவிகளுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்களை பாதிக்கப்படடுள்ள நேபால்கான்ஞ் நகரத்திற்கு இந்தியா அனுப்பியுள்ளது.
பாதிப்படைந்த நேபாளத்திற்கு முதன்முதலில் நிவாரணங்களை இந்தியா அனுப்பியுள்ளதாக நேபாளத்திலுள்ள இந்திய தூதரகம் தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இதுவரையில் 21 டன்களுக்கும் அதிகமான உதவிகள் நேபாளுக்கு இந்தியா அனுப்பியுள்ளதாக இந்திய விமானப் படைத் தெரிவித்துள்ளது.