அமெரிக்காவின் குற்றச்சாட்டை நிராகரித்த இந்தியா ; ட்ரம்பின் அதிரடி பதில்
அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படாத நிலையில், இந்தியா மீது அமெரிக்கா 50 சதவீத வரியை விதித்துள்ளது.
இது இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் (Howard Lutnick) கருத்துத் தெரிவிக்கையில்,
"ஒப்பந்தங்கள் அனைத்தும் தயாராக இருந்தன. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ட்ரம்புடன் தொலைபேசியில் பேசி அதனை இறுதி செய்ய வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவர் அழைக்கவில்லை. அதன் காரணமாகவே இந்தியா மீது வரி விதிக்கப்பட்டது," என்று கூறியிருந்தார். இந்தநிலையில், பிரதமர் மோடி நேரடியாகப் பேசாததால் தான் ஒப்பந்தம் முறிந்தது என்ற அமெரிக்காவின் கூற்றை இந்தியா நிராகரித்துள்ளது.
இந்திய அரசுக்கு (ஒப்பந்தத்தில்) உடன்பாடு இல்லை, அதனால் மோடி அழைக்கவில்லை" என்று லுட்னிக் கூறினார். ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது 500 சதவீதம் வரை வரி விதிக்கும் சட்டமூலத்தை ட்ரம்ப் நிர்வாகம் அனுமதியளித்துள்ளது.
இது இந்தியாவிற்குப் பெரும் சவாலாக அமையக்கூடும் எனக் கருதப்படுகிறது.
அத்துடன், தனது அதிகாரங்களுக்கு எல்லைகள் உண்டா என்று ஆங்கில நாளிதழ் ஒன்றில் கேட்கப்பட்ட கேள்விக்கு, "எனது சொந்த சிந்தனை மட்டுமே என்னைத் தடுக்கும்.
எனக்கு சர்வதேச சட்டங்கள் தேவையில்லை," என ட்ரம்ப் அதிரடியாகப் பதிலளித்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிவிக்கின்றன.