இந்தியா- அமெரிக்கா உறவு; பென்டகன் வெளியிட்ட அறிவிப்பு!
இந்தியாவுடன் அமெரிக்கா மிக முக்கியமான பாதுகாப்பு உறவைக் கொண்டுள்ளது என்று பென்டகன் தெரிவித்துள்ளது.
இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே மிக முக்கியமானது என்றும் குறிப்பிட்டுள்ளது.
எனவே இந்தியத் தலைமையுடன் தொடர்ந்து இணைந்து செயற்பட உள்ளதாக பென்டகன் செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய ஜெனரல் பாட் ரைடர்(General Pat Ryder) தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில்,
அறிவிக்க ஏதாவது இருக்கும் போது, நிச்சயமாக நாங்கள் அதனை செய்வோம். ஆனால் நாங்கள் ஏற்கனவே பல்வேறு முனைகளில் ஒத்துழைப்புடன் செயற்படுகிறோம்.
குவாட் போன்ற வழிமுறைகள் மூலம் ஒன்றிணைந்துள்ளோம். 2023 ஆண்டிலும் இரு தரப்பு பாதுகாப்பு உறவை வலுவாக தொடர நாங்கள் எதிர்பார்க்கிறோம் என ஜெனரல் பாட் ரைடர் (General Pat Ryder)தெரிவித்துள்ளார்.