நாசாவின் புதிய தலைமை தொழில்நுட்ப வல்லுநராக இந்தியர் நியமனம்
நாசாவின் புதிய தலைமை தொழில்நுட்ப வல்லுநராக இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளித்துறை நிபுணர் ஏசி சரனியா நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் உள்ள நாசா தலைமையகத்தில் தொழில்நுட்ப கொள்கை மற்றும் திட்டங்களில் நாசாவின் நிர்வாகி பில் நெல்சனின் முதன்மை ஆலோசகராக பணியாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
I am excited @ac_charania has joined @NASA as our new Chief Technologist. I look forward to working together to keep NASA at the cutting edge of technology! pic.twitter.com/WhQOTKgTA8
— Pamela Melroy (@Astro_Pam) January 10, 2023
விண்வெளி பொறியியலில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றவரான ஏசி சரனியா நாசாவில் இணைவதற்கு முன்பு, சான்றிதழ் பெற்ற தனியார் விண்வெளி நிறுவனமான ரோபோடிக்ஸ் நிறுவனத்தில் தயாரிப்பு மூலோபாயத்தின் துணைத்தலைவராக பணியாற்றியுள்ளார்.
A.C. Charania has been named as our agency's chief technologist. He will lead technological innovation and investments across our six mission directorates. Learn more about Charania's career and welcome him to our agency: https://t.co/SL2js0h0Yi pic.twitter.com/4av3oMYRX1
— NASA People (@NASApeople) January 9, 2023
மேலும் இவர் விண்வெளி தொழில்நுட்பம் தொடர்பான பல்வேறு முக்கிய பொறுப்புகளையும் வகித்துள்ளார் என்பது குறிப்படத்தக்கது.