அமெரிக்கா தேர்தலில் இந்திய வம்சாவளி செனட்டராகத் தேர்வு
அமெரிக்காவில் வசித்து வரும் இந்திய வம்சாவளி தமிழரான வின் கோபால் நியூ ஜெர்சி மாகாணத்தில் செனட்டராக மூன்றாவது முறைத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அதிக செலவினம் கொண்டு பலராலும் கவனிக்கப்பட்ட நியூ ஜெர்சி 11 வது காங்கிரஸ் மாவட்டத்தில் குடியரசு கட்சி சார்பில் வின் கோபால் போட்டியிட்டுள்ளார்.
ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஸ்டீவ் டினிஸ்ட்ரியனை 60 சதவீத வாக்குகள் பெற்று வின் கோபால் தோற்கடித்துள்ளார்.
நியூ ஜெர்சி மாநில செனட் அவையின் 38 வயதுடைய இளைய உறுப்பினரும் அம்மாநில வரலாற்றில் தெரிவு செய்யப்பட்ட முதல் தெற்காசிய அமெரிக்கருமாக வின் கோபால் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்க
விடயமாகும்.
கடந்த 2017 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் வின் கோபால் செனட் உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.
தற்போது செனட் கல்விக் குழுவில் தலைமை வகிக்கும் இவரது பணிகள் மற்றும் இருதரப்பு கொள்கைக்காகவுமே மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.