அமெரிக்க கப்பல் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய ஈரான்
ஈரான் - இஸ்ரேல் போர்ச்சூழலில் ஒரு பெரும் திருப்பமாக, ஈராக் கடல் எல்லைக்குள் அமெரிக்காவிற்கு சொந்தமான 'சேஃப்சீ விஷ்ணு' என்ற கச்சா எண்ணெய் தாங்கி கப்பல் மீது ஈரானின் தற்கொலைப்படை படகு தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் கப்பலில் பணியாற்றிய இந்திய மாலுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கப்பலில் இருந்த மற்ற 27 மாலுமிகள் பத்திரமாக மீட்கப்பட்டு பஸ்ரா நகருக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்திய அரசு இந்த தாக்குதலைக் கடுமையாக கண்டிப்பதோடு, சர்வதேச கடல் பகுதிகளில் பணியாற்றும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இதற்கிடையில், ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி, தங்கள் நாடு இந்த பிராந்திய போருக்குள் இழுக்கப்படுவதை தவிர்க்க வேண்டும் என்று அமெரிக்காவிடம் வலியுறுத்தியுள்ளார்.
ஆனால், ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியன், ஈரானின் உரிமைகளை ஏற்பது மற்றும் இழப்பீடு வழங்குவது மட்டுமே போரை முடிக்க ஒரே வழி என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். இந்த தாக்குதல் மேற்காசியவின் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.