ஈரான் ஏவுகணை திட்டம் ; டொனால்ட் ட்ரம்ப் குற்றச்சாட்டு
ஈரானிய ஆட்சியினால் ஏற்படும் அச்சுறுத்தல்களை ஒழிப்பதற்காக, ஈரான் நாட்டில் அமெரிக்கா தொடர்ந்து பாரிய அளவிலான போர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறினார்.
ஈரான் அமெரிக்காவின் எச்சரிக்கைகளை புறக்கணித்ததோடு, அணு ஆயுதங்களைத் தயாரிப்பதைக் கைவிட மறுத்துவிட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஈரானின் ஏவுகணைத் திட்டமானது, அவர்களின் அணு ஆயுத மேம்பாட்டிற்கு ஒரு பாதுகாப்புக் கவசமாகச் செயல்படுவதற்காகவே உருவாக்கப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்தார்.
இதனை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா விரும்பியபோது, அனைத்து நாடுகளும் எங்களுக்குப் பின்னால் நின்றன என்று ட்ரம்ப் கூறினார்.
அணு ஆயுதங்கள் மற்றும் நீண்ட தூர ஏவுகணைகளைக் கொண்ட ஒரு ஈரானிய ஆட்சி, மத்திய கிழக்கிற்கும் அமெரிக்க மக்களுக்கும் ஒரு பொறுத்துக் கொள்ள முடியாத அச்சுறுத்தலாக அமையும் என்றும் அவர் வலியுறுத்தினார்.