உலக நாடுகளிடம் ஈரானின் கோரிக்கை ; அமெரிக்காவிற்கு காத்திருக்கும் சிக்கல்
அமெரிக்க-இஸ்ரேலிய ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் ஒற்றுமையாகவும் பொறுப்புடனும் செயல்பட வேண்டும் என ஈரான் கோரியுள்ளது.
ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

OIC என்ற இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் புதிய பொதுச் செயலாளரான இஸ்மாயில் உல்ட் ஷெய்க் அகமதுடன் (Ismail Ould Cheikh Ahmed) தொலைபேசியில் உரையாடியபோது அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
பாலஸ்தீனம் மற்றும் லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ச்சியாக நடத்தி வரும் தாக்குதல்கள் குறித்தும், ஈரானின் இறையாண்மைக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் குறித்தும் இதன்போது OIC தலைவரிடம் அராக்சி தனது அதிருப்தியை பகிர்ந்து கொண்டார்.
பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள தற்போதைய பதற்றமான சூழலை எதிர்கொள்ள இஸ்லாமிய நாடுகள் யாவும் தெளிவான மற்றும் ஒருங்கிணைந்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டியதன் அவசியத்தை அராக்சி இந்த தொலைபேசி உரையாடலின்போது வலியுறுத்தியுள்ளார்.