ஈரானை ட்ரம்ப் வழிநடத்தட்டும் ; ஈரான் உயர் தலைவர் கமேனி
ஈரானை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வழிநடத்தட்டும் என ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார்.
ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டக்காரர்களுடன் துணை நிற்பேன் என டிரம்ப் கூறிவரும் நிலையில், ஈரான் அரசு எதைச் செய்தாலும் விமர்சிக்கும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அவ்வளவு திறமையானவராக இருந்தால் ஈரானை ஆட்சி செய்யட்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானில் பணவீக்கம்
ஈரானில் பணவீக்கம் அதிகரித்துள்ளதால், மக்களில் பொருளாதாரச் சூழல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அன்றாட செலவே அதிகரித்து காணப்படுவதால், ஆத்திரமடைந்துள்ள மக்கள், கடந்த ஆண்டு டிசம்பா் இறுதியில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அமெரிக்கா துணை நிற்கும் என்றும், போராட்டக்காரர்கள் மீது ஈரான் படைகள் தாக்குதல் நடத்தினால், அமெரிக்கா களமிறங்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில், தனது எக்ஸ் தளப் பக்கத்தில் கமேனி பதிவிட்டுள்ளதாவது, ''ஈரானிய அரசாங்கம் இதைச் செய்தாலும் சரி, அதைச் செய்தாலும் சரி, போராட்டக்காரர்களுடன் சேர்ந்து கொள்வேன் என்று அமெரிக்க அதிபர் அறிவித்தார். போராட்டக்காரர்கள் அவர் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.
அவர் அவ்வளவு திறமையானவராக இருந்தால், ஈரானை வழிநடத்தட்டும்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.