ஈரான் போர் விரைவில் முடிவடையும் ; ட்ரம்ப் வெளியிட்ட தகவல்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் போர் விரைவில் முடிவடையும் என்று தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு ஊடகமொன்றிற்கு ஜனாதிபதி ட்ரம்ப் அளித்த பேட்டியில்,"நான் விரைவில், மிக விரைவில் போர் முடிவுக்கு வரும் என நினைக்கிறேன், அவர்களது தலைமை உள்பட அவர்களிடம் உள்ள அனைத்தும் போய்விட்டது," என்று கூறினார்.

மிகவும் கடுமையாகத் தாக்குவோம்...
தொடர்ந்து பேசிய ட்ரம்ப் ஹார்முஸ் நீரினை மூடப்பட்டதால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருவது பற்றிய கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, "ஈரான் அதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால், அவர்கள் மீதான தாக்குதல் மேலும் தீவிரமடையும்.
நாம் அவர்களை மிகவும் கடுமையாகத் தாக்குவோம், அவர்கள் ஏதாவது செய்தால் கூட, அவர்களாலோ அல்லது அவர்களுக்கு உதவும் வேறு யாராலோ உலகின் அந்தப் பகுதியை ஒருபோதும் மீட்டெடுக்க முடியாது.
போர் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகவே நான் நினைக்கிறேன். அவர்களிடம் கடற்படை இல்லை, தகவல் தொடர்பு இல்லை, விமானப்படை இல்லை. அவர்களின் ஏவுகணைகள் சிதறடிக்கப்பட்டுள்ளன.
அவர்களின் ட்ரோன்கள் எல்லா இடங்களிலும் வெடிக்கப்படுகின்றன, அவர்களின் ட்ரோன் உற்பத்தி உட்பட. நீங்கள் பார்த்தால், அவர்களிடம் எதுவும் மிச்சமில்லை. இராணுவ அர்த்தத்தில் எதுவும் மிச்சமில்லை," என்று தெரிவித்தார்.