பாதுகாப்பு மிகுந்த அமெரிக்க சிறையில் இருந்து தப்பிய ஐ.எஸ் தீவிரவாதி
ஐ.எஸ் பீட்டில் என அறியப்படும் தீவிரவாதி, பாதுகாப்பு மிகுந்த அமெரிக்க சிறையில் இருந்து மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்துள்ளார் ஐ.எஸ் பீட்டில் என அறியப்படும் அலெக்ஸாண்டா கோட்டே. சிரியாவில் அமெரிக்க பிணைக்கைதிகள் நால்வரை மிக கொடூரமாக கொலை செய்த குற்றத்திற்காக அலெக்ஸாண்டா கோட்டே ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தார்.
ஆனால் தற்போது இவர் தொடர்பில் சிறை ஆவணங்களில் எந்த தகவலும் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. 2022 ஏப்ரல் மாதத்தில் இருந்து அலெக்ஸாண்டா கோட்டே சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.
ஆனால் கடந்த ஆகஸ்டு மாதம் பாதுகாப்பு மிகுந்த சிறைச்சாலைக்கு அனுப்பி வைத்த பின்னர் அவர் தொடர்பான எந்த ஆவணங்களும் பதிவாகவில்லை என்றே கூறப்படுகிறது.
பிரிட்டனின் லண்டன் நகரில் பிறந்த அலெக்ஸாண்டா கோட்டே 8 வழக்குகளில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தார். அமெரிக்க சிறைகளில் அலெக்ஸாண்டா கோட்டே இல்லை என உறுதி செய்யப்பட்ட நிலையில், பலவேறு விளக்கங்கள் அளிக்கப்பட வேண்டியிருக்கும் என கூறப்படுகிறது.
ஆனால், மருத்துவ காரணங்களுக்காக அல்லது வேறு பல காரணங்களுக்காக அலெக்ஸாண்டா கோட்டே பாதுகாப்பு மிகுந்த சிறையில் இருந்து மாற்றப்பட்டிருக்கலாம் எனவும், அமெரிக்க சிறை நிர்வாகம் தீவிரவாதி ஒருவரை தப்பிக்க வைத்திருக்கும் என கூற முடியாது என்கிறார் நிபுணர் ஒருவர்.