ட்ரோன் உதவியுடன் ஆயுதங்கள் கடத்தல் ; முயற்சியை முறியடித்த இஸ்ரேல்
காசாவில் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக கடுமையான தாக்குதலில் இஸ்ரேல் ஈடுபட்டு வரும் சூழலில், 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர்.
இதில் பயங்கரவாதிகளை விட, பொதுமக்களே அதிக அளவில் இலக்காகி உள்ளனர். இந்நிலையில் இஸ்ரேல் பாதுகாப்பு படை (ஐ.டி.எப்.) வெளியிட்டு உள்ள செய்தியில், இஸ்ரேலின் கிழக்கு எல்லை பகுதி வழியே டிரோன் ஒன்று ஊடுருவி வடக்கு பிராந்தியத்திற்கு இரவு நேரத்தில் செல்ல முயன்றது.

எனினும், வான் கட்டுப்பாட்டு சாதனம் அதனை உடனடியாக கண்டறிந்தது. இதில், அந்த டிரோன் ஆயுதங்களை கடத்த முயற்சித்தது தெரிய வந்தது என்று தெரிவித்து உள்ளது.
இதனை தொடர்ந்து, வடக்கு மாவட்டத்தில் இருந்த இஸ்ரேல் பொலிஸார் சம்பவ பகுதிக்கு உடனடியாக சென்று அந்த டிரோனை அடையாளம் கண்டனர். அதில், 12 கைத்துப்பாக்கிகள் இருந்தன.
அதனை சுமந்து கொண்டு அந்த டிரோன் ஊடுருவி வடக்கு பகுதிக்கு சென்றது தெரிய வந்தது.
எனினும், அவற்றை கடத்தியதற்கான காரணம் மற்றும் யாரிடம் கொண்டு சேர்க்க டிரோன் சென்றது போன்ற தகவல்கள் எதுவும் ஐ.டி.எப். படையினரால் வெளியிடப்படவில்லை.