லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்... இதுவரையில் 274 பேர் உயிரிழப்பு!
லெபனானில் இருக்கும் ஹிஸ்புல்லா அமைப்பின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 21 சிறுவர்கள் மற்றும் 39 பெண்கள் உட்பட 274 பேர் உயிரிழந்ததாக லெபனான் அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் பிராஸ் அபியாட் தெரிவித்துள்ளார்.
மேலும் தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, கடந்த வாரம், லெபனானில் பரவலாக ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவைச் சேர்ந்தோர் பயன்படுத்தும் பேஜர்கள் மற்றும் வாக்கி டாக்கிகள், சைபர் வழி தாக்குதல்கள் மூலம் வெடிக்க வைத்ததில் ஹிஸ்புல்லா குழுவைச் சேர்ந்தோர் மட்டுமல்லாது பொதுமக்கள் உள்பட சுமார் 3,000 பேர் காயமடைந்தனர்.
மேலும், இரு சிறுவரகள் உள்பட 37 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.